×

சென்னையில் 786 காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு.. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? முழு விவரம் உள்ளே!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், காவலர்களும் துப்புரவு பணியாளர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். தற்போது மீண்டும் 4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக் கணக்கான காவலர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில்
 

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், காவலர்களும் துப்புரவு பணியாளர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். தற்போது மீண்டும் 4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக் கணக்கான காவலர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் மொத்தமாக 758 போலீசாருக்கு கொரோனா பரவி இருந்த நிலையில், நேற்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 786 ஆக உயர்ந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுள் 301 காவலர்கள் குணமடைந்து விட்டதாகவும், நேற்று ஒரே நாளில் 16 காவலர்கள் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோன வைரசால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.