×

அனைத்து படிப்புகளுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மசோதா!

அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. 2021 ஆம் ஆண்டு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட முன்வடிவு நாளை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு
 

அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட முன்வடிவு நாளை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டது.

இதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், நாளை உயர்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் அப்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.