×

‘அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு’ : உயர் நீதிமன்றக்கிளையில் முறையீடு!

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த மனுதாரர் பிரீத்தி சார்பில் வழக்கறிஞர் பினைகரஷ் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார் . அரசு பள்ளி மாணவர்களின்
 

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த மனுதாரர் பிரீத்தி சார்பில் வழக்கறிஞர் பினைகரஷ் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார் .

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த நிலையில் தமிழக அரசு, உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி அளித்தது குறிபிடத்தக்கது .