×

61 லட்சம் மதிப்புள்ள 505 பழங்கால தங்க நாணயங்கள்: திருவானைக்காவல் கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்!

இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள் தூய்மைப்படுத்திய போது அங்கு குழிதோண்டியுள்ளனர். திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான விளங்குகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள் தூய்மைப்படுத்திய போது அங்கு குழிதோண்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து ஏதோ தட்டுப்படுவது போல வித்தியாசமான சத்தம் கேட்க அங்குள்ள மண்ணை தள்ளி பார்த்தபோது, செப்பு பாத்திரம் ஒன்று
 

இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப்  பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள்  தூய்மைப்படுத்திய போது  அங்கு குழிதோண்டியுள்ளனர். 

திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான விளங்குகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப்  பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள்  தூய்மைப்படுத்திய போது  அங்கு குழிதோண்டியுள்ளனர். 

அப்போது அங்கிருந்து ஏதோ  தட்டுப்படுவது போல வித்தியாசமான சத்தம் கேட்க அங்குள்ள மண்ணை தள்ளி பார்த்தபோது, செப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 3.5 கிராம் முதல் 3.8 கிராம் எடை அளவுள்ள 504 தங்க நாணயங்களும், 10 கிராம் எடை அளவுள்ள ஒரு தங்க நாணயம் என மொத்தம் 505 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது. இதன் மொத்த எடை 1715 கிலோ கிராம் ஆகும். இதன் தற்போதைய மதிப்பு 61 லட்சமாகும்.

இந்த நாணயங்கள் அனைத்தும்   பழங்காலத்து நாணயங்கள் என்பதால் இதன் மதிப்பை தொல்லியல் துறையினர் கணக்கிடவேண்டும். இதனால் இவை  ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் முன்னிலையில் திருச்சி மாவட்ட வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.