×

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்… புள்ளிங்கோவை அலேக்காக தூக்கிய போலீஸ்!

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் மக்கள் அதனை மதிக்காமல் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா விதிகளை மீறியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பட்டாக் கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இளைஞர்கள் பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடியதன் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர். சுனில் என்பவரது
 

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் மக்கள் அதனை மதிக்காமல் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா விதிகளை மீறியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பட்டாக் கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இளைஞர்கள் பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடியதன் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர். சுனில் என்பவரது பிறந்தநாளை 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் கூறி 3 அடி நீள கத்தியால் கேக் வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட போலீசார், சுனில் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

முதன்முதலில் பினு என்கிற பிரபல ரவுடி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி இந்த கலாச்சாரத்தை தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னையின் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. பட்டாக்கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் தரப்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.