×

கொரோனாவால் கோவையில் தொடர் மரணங்கள்… அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 65பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 65பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் சூலூர் கலங்கல் சாலை ஸ்ரீநகரை சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
மேலும், கணபதி ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்த 72 வயதான மூதாட்டி கொரோனாவால் பலியான நிலையில் கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.