×

கிசான் திட்டத்தில் மோசடி; கள்ளக்குறிச்சியில் இதுவரை ரூ.5.60 கோடி வசூல்!

கிசான் திட்டத்தில் மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சிறு குறு கடன் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது பிரதமர் கிசான் திட்டம். அந்த திட்டத்தில் தமிழக விவசாயிகள் லட்சக் கணக்கானோர் பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் உதவி வாங்கித் தரப்படுவதாக கூறப்பட்டது. இதனை அறிந்த வேளாண்துறை அமைச்சர், மோசடி செய்தவர்கள்
 

கிசான் திட்டத்தில் மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சிறு குறு கடன் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது பிரதமர் கிசான் திட்டம். அந்த திட்டத்தில் தமிழக விவசாயிகள் லட்சக் கணக்கானோர் பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் உதவி வாங்கித் தரப்படுவதாக கூறப்பட்டது. இதனை அறிந்த வேளாண்துறை அமைச்சர், மோசடி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அம்மாவட்ட உயரதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தில் மோசடி செய்த 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக கிசான் திட்டத்தில் 2 லட்சம் பேர் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் கிசான் திட்டத்தின் கீழ் அவர்கள் பெற்ற பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன் படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தில் மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.