×

வைகை அணையிலிருந்து மூன்று மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 4200 கன அடி தண்ணீர் திறப்பு

தேனி,நவ.30 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் கால்வாயில் 1, 200 கன அடி தண்ணீரும், ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் ஆக மொத்தம் வினாடிக்கு 4200 கன அடி தண்ணீர் இன்று மாலை 4 மணியளவில் பொதுப்பணித்துறையினரால் திறந்து விடப்பட்டனர். இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில்,வைகை அணையிலிருந்து மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி
 

தேனி,நவ.30

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் கால்வாயில் 1, 200 கன அடி தண்ணீரும், ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் ஆக மொத்தம் வினாடிக்கு 4200 கன அடி தண்ணீர் இன்று மாலை 4 மணியளவில் பொதுப்பணித்துறையினரால் திறந்து விடப்பட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில்,
வைகை அணையிலிருந்து மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி பரப்பளவான ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் நிலங்களுக்கு இன்று 30.11.2020 காலை 6 மணி முதல் தண்ணீர் திறந்துவிட பட உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் பாசனப் பகுதி மூன்றுக்கு 30.13.2020 முதல் 16.12.2020 வரை 6 நாட்களுக்கு 1093 மில்லியன் கன அடி தண்ணீரும், பாசனப் பகுதி இரண்டுக்கு 07.12 2020 முதல் 12.12.2020 வரை 5 நாட்களுக்கு 449 மில்லியன் கனஅடி தண்ணீரும், பாசனப் பகுதி ஒன்றுக்கு 13.12.2020 முதல் 17.12.2020 வரை 4 நாட்களுக்கு 250 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட உள்ளதாகவும், அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுமாறு விவசாய பெருங்குடி மக்களை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.