×

417 படிக்கட்டுகள் மலையேறி பிள்ளையாரை தரிசித்த 104 வயது மூதாட்டி – குவியும் வாழ்த்துகள்!

நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து 70 வருடங்களாக திருச்சி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருக்கும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் ,417 படிக்கட்டுகள் மலை ஏறி தரிசனம் செய்து வருகிறார் 104 வயது மூதாட்டி ஒருவர். நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து 70 வருடங்களாக திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருக்கும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் ,417 படிக்கட்டுகள்
 

நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து 70 வருடங்களாக திருச்சி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருக்கும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் ,417 படிக்கட்டுகள் மலை ஏறி தரிசனம் செய்து வருகிறார் 104 வயது மூதாட்டி ஒருவர். 

நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து 70 வருடங்களாக திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருக்கும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் ,417 படிக்கட்டுகள் மலை ஏறி தரிசனம் செய்து வருகிறார் 104 வயது மூதாட்டி ஒருவர். 

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு அருகில் வசிப்பவர் தனலட்சுமி. 104 வயதான இவர், ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று மலைக்கோட்டை கோயிலுக்கு வந்து மலை உச்சியில் ஏறி உச்சி பிள்ளையாரை தரிசித்து வருகிறார். வழக்கம் போல் இந்த வருடமும் மலைக் கோயிலுக்கு வந்த தனலட்சுமி பாட்டி, யார் தயவுமின்றி தானாகவே 417 படிக்கட்டுகளையும் (273 அடி உயரம்) ஏறி பிள்ளையாரை தரிசித்து விட்டு கீழே இறங்கினார். திடகாத்திரமாக உடல்வாகு உள்ளவர்களே 417 படிக்கட்டுகளையும் ஏறி, இறங்க சிரமப்படும் நிலையில் 104 வயது மூதாட்டியான தனலட்சுமி எந்த பிரச்னையுமின்றி, களைப்பே தெரியாமல், சர்வ சாதாரணமாக மலைக்கோட்டையில் ஏறி, இறங்கியது உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க வந்த பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து தனலட்சுமி கூறுகையில், எனக்கு 30 வயதில் திருமணமானது. ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று காலை உச்சி பிள்ளையாரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். கடந்த 70 வருடமாக ஒரு ஆண்டு கூட தவறாமல் பிள்ளையாரை தரிசித்து வருகிறேன். உச்சிக்கு ஏறிச்சென்று தரிசிப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.  காலையில் எழுந்து வீட்டில் கொழுக்கட்டை செய்து, சாம்பிராணி காட்டி பூஜை செய்து விட்டு, பட்டினியாக மலைக்கோட்டை கோயிலுக்கு ஏறி வருவேன். இங்கு தரிசனம் செய்த பின், வீட்டுக்கு சென்று விரதத்தை முடித்துக் கொள்வேன். இதைத் தான் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறேன். முன்பெல்லாம் கோயிலில் பொங்கல் தருவார்கள். இப்போது தருவதில்லை என்றார்.