×

அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்கம், 601.4 கிலோ வெள்ளி!

அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை
 

அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 68 கோடி டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியது.

இந்நிலையில் அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில்
6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன. 29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.ஜெயலலிதா பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்