×

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சரிந்தது – மௌன அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

கோவில்பட்டி கோவில்பட்டி அருகே, பலத்த காற்றுக்கு வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்துக்கு கிராம மக்கள் மௌ அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் வீசி பலத்த காற்றுக்கு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சரிந்து விழுந்தது. 3 தலைமுறைகளாக தங்களுடன் பயணித்த மரத்திற்கு கிராம மக்கள் மௌன அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, சில முதியவர்கள் மரங்களின் பாகங்களை தொட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.
 

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே, பலத்த காற்றுக்கு வேரோடு சரிந்து விழுந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்துக்கு கிராம மக்கள் மௌ அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் வீசி பலத்த காற்றுக்கு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சரிந்து விழுந்தது. 3 தலைமுறைகளாக தங்களுடன் பயணித்த மரத்திற்கு கிராம மக்கள் மௌன அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, சில முதியவர்கள் மரங்களின் பாகங்களை தொட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.


லிங்கம்பட்டி சுற்றியுள்ள பகுதியில், வீசிய பலத்த காற்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சில வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது சரிந்து விழுந்தது.


சுமார் 300 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு நிழல் தந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 3 தலைமுறைகளுக்கு மேலாக தங்களுடன் பயணித்து வந்த மரம் வேரோடு சரிந்து போனதை தாங்கி கொள்ள முடியாத முதியவர்கள் சிலர் மரத்தினை பாகங்களை தொட்டு கண்ணீர் வடித்தனர். அப்பகுதி மக்கள் மரத்திற்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.


இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.