×

நஷ்டத்தால் மூடப்படும் 300 திரையரங்குகள்!?

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு எதிரொலியால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழலில் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, தமிழகத்தில் கடந்த நவம்பர் 10 ஆ தேதி முதல் தியேட்டரகள் திறக்கப்பட்டன. ஆனால் புதுப்பட ரீலீஸ் எதுவுமே இல்லாத நிலையில், மெகா ஹிட் படங்களான சிவாஜி, மெர்சல், விஸ்வாசம், பாபநாசம் போன்ற படங்கள் மறுபடியும் திரையிடப்பட்டன. 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் விபிஎப்
 

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு எதிரொலியால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழலில் உள்ளது.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு, தமிழகத்தில் கடந்த நவம்பர் 10 ஆ தேதி முதல் தியேட்டரகள் திறக்கப்பட்டன. ஆனால் புதுப்பட ரீலீஸ் எதுவுமே இல்லாத நிலையில், மெகா ஹிட் படங்களான சிவாஜி, மெர்சல், விஸ்வாசம், பாபநாசம் போன்ற படங்கள் மறுபடியும் திரையிடப்பட்டன. 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் விபிஎப் கட்டண பிரச்னையையும் எதிர்கொண்டது.

இந்நிலையில் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதால் திரையரங்குகளை பராமரிக்கக்கூட வருமானம் இல்லாமலும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும் திரையரங்க உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். திறக்காத திரையரங்குகளுக்கும் ரூ.30,000  முதல் ரூ.1.25 லட்சம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழலில் உள்ளது.