×

“வீட்டிலிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளை உணவு” : அமைச்சர் மா. சுப்ரமணியன்

கொரோனாவால் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் அனைவர்க்கும் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்த நிலையில் வீட்டிலிருக்கும் கொரோனா
 

கொரோனாவால் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கொரோனா வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் அனைவர்க்கும் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்த நிலையில் வீட்டிலிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் உணவு இலவசமாக அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல இந்த திட்டத்தாய் செயல்படுத்தி வருகிறது. ‘ஆரண்யா அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கும், ஆதரவற்ற வயதான நோயாளிகளுக்கும், நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கும் இலவச உணவை வீடு தேடி சென்று அளித்து வருகிறது. கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அடையார் ஆகிய இடங்களில் உணவு வேண்டுவோர் 044-42997501 என்ற எண்ணில் ஒருநாள் முன்னதாகவே போன் செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.