×

மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாக மாற்றி உழுத விவசாயிக்கு நிதி அமைச்சர் உதவி

உழவு இயந்திரம் வாங்க வசதியில்லாத விவசாயி, ஆட்களை வைத்து வேலை வாங்க வசதியில்லாத விவசாயி நாகராஜன், தனது மகனின் சைக்கிளையே உழவு இயந்திரமாக மாற்றி, 11வயது மகனையே உழவுக்கு உதவியாக வைத்திருந்தார். இதை அறிந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் உத்தரவின் பேரில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சி.எச்.சேகர் அசூர் கிராமத்திற்கு சென்று விவசாயி நாகராஜ் குடும்பத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் தந்து, நாகராஜின் மகனுக்கு புது சைக்கிளும் வழங்கினார்.
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அசூர் கிராமம். இந்த கிராமத்தில் நாகராஜ் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்து வருகிறார். இந்த சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். செலவும் அதிகமாகிறது. இதனால் அவர் சைக்கிள் ஏர் கலப்பையை பயன்படுத்தி தானே களை எடுத்து வருகிறார். அதற்கு அவரது மகன் மட்டுமே உதவியாக இருக்கிறார்.

இப்போதெல்லாம் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு விவசாய தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் களை எடுக்க ஆள் கிடைப்பதில்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும் கூட ஒரு ஏக்கருக்கு 5 நாட்களில் களை எடுக்க 40 ஆள் கூலியாக 6000 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி எட்டு முறை களை எடுக்க வேண்டும். அதனால் களை எடுப்பதற்கு மட்டுமே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

விவசாயி நாகராஜுக்கு இது சிரமமாக இருந்தது. பணத்தை கொடுத்தும் கூலியை கொடுத்தும் ஆட்களை கொண்டு வருவதற்கு, பெரும்பாடாக இருக்கிறதே என்று கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நாகராஜ், அங்கே ஒரு விவசாயி சைக்கிளில் ஒருபகுதியில் ஏர் கலப்பையை பொருத்தி மலர் தோட்டத்தில் களை எடுப்பதை பார்த்திருக்கிறார். இதையே நாம் முயற்சிக்கலாமே என்று தன் ஊருக்கு வந்து தன் மகனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன் ஒரு பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அந்தப் பகுதியில் அதாவது முன்பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏர் கலப்பையை கொடுத்து கயிறு மூலம் இழுத்துச் செல்கிறார். பின்னால் அவரது மகன் ஏர் கலப்பையை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

உழவு இயந்திரம் எல்லாம் வாங்கிவிட வருமானம் இல்லாமல் தன் மகனின் சைக்கிளை கொண்டு விவசாயம் செய்து வரும் நாகராஜின் செயல் கண்டு, அவருக்கு உதவியிருக்கிறார் நிதி அமைச்சர். திமுகவின் இந்த உதவிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நாகராஜ்.