×

அன்பால் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்..கமல் புகழாரம்

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள். 22.6.1974ல் பிறந்த அவர் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன், ‘’தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள்
 

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள். 22.6.1974ல் பிறந்த அவர் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன், ‘’தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

கமல் மீதும் அவர் நடிப்பு மீதும் அதிக மதிப்பு வைத்திருக்கும் விஜய், அபூர்வ சகோதரர்கள் படத்தின் அப்பு கேரக்டர் இன்று வரைக்கும் தனக்கு ஆச்சர்யமாக இருப்பதாக அவ்வப்போது சொல்லி வருகிறார். அந்த கேரக்டரின் மீது உள்ள ஈர்ப்பும், ஆச்சரியமும் எப்போதும் குறைவதில்லை என்றும் பலமேடைகளில் கூறியிருக்கிறார். விஜய்யின் அமைதி, பெருந்தன்மை குறித்தும் பல மேடைகளில் மனம் திறந்து பேசியுள்ளார் கமல்.

இன்று விஜய்யின் பிறந்த தினத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினை சொல்லி இருக்கிறார் கமல்.