×

சீமானுக்கு வைரமுத்து,வேல்முருகன் ஆறுதல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன்(90) நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலிருக்கும் அரணையூரில் அவர் காலமானார். செந்தமிழன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கலில், ’’என் உடன்பிறவாச் சகோதரர்நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமானின் தந்தையார்செந்தமிழனார் மறைவுக்குஎன் அஞ்சலி. சீமான் குடும்பத்தார்க்கும்,சுற்றத்தார்க்கும்,நாம் தமிழர் உறவுகட்கும்என் ஆழ்ந்த இரங்கல்.’’என்று தெரிவித்துள்ளார். ’’இனிய நண்பரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.சீமான்.அவர்களின் தந்தை ஐயா.செந்தமிழன்.அவர்கள் அரணையூரில் காலமானார் என்ற செய்தியறிந்து
 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன்(90) நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலிருக்கும் அரணையூரில் அவர் காலமானார்.

செந்தமிழன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கலில்,

’’என் உடன்பிறவாச் சகோதரர்
நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானின் தந்தையார்
செந்தமிழனார் மறைவுக்கு
என் அஞ்சலி.

சீமான் குடும்பத்தார்க்கும்,
சுற்றத்தார்க்கும்,
நாம் தமிழர் உறவுகட்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.’’என்று தெரிவித்துள்ளார்.

’’இனிய நண்பரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.சீமான்.அவர்களின் தந்தை ஐயா.செந்தமிழன்.அவர்கள் அரணையூரில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் சகோதரர் திரு.சீமான்.மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.’’என்று தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன்.