×

நண்பர் விவேக் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன்…திருமாவளவன்

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விவேக்கின் இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக அவரது பிஆர்ஓ தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விவேக்கின் உடல்நிலை குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் வெளியிடப்படுமென்றும் எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்
 

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விவேக்கின் இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக அவரது பிஆர்ஓ தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விவேக்கின் உடல்நிலை குறித்த அறிக்கை இன்று மாலைக்குள் வெளியிடப்படுமென்றும் எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் உடல் நலம்பெற வேண்டும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நகைச்சுவை நடிகர் நண்பர் விவேக் அவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.