×

இரு மாநில அரசும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும் -கமல் பரபரப்பு

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைக்குள் வந்து கொட்டும் கொடூரம் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தமிழக எல்லையில் உள்ள அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வெளிப்படையாக எங்கேயும் கொட்டமுடியாததால், பட்டா நிலம் வாங்கி அங்கு குழிதோண்டு புதைத்து செல்வது அம்பலமாகி இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தமிழக எல்லைக்குள் இரட்டைமடை பிரிவு பகுதியில் தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய கேரள பதிவு எண் கொண்ட 3
 

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைக்குள் வந்து கொட்டும் கொடூரம் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தமிழக எல்லையில் உள்ள அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வெளிப்படையாக எங்கேயும் கொட்டமுடியாததால், பட்டா நிலம் வாங்கி அங்கு குழிதோண்டு புதைத்து செல்வது அம்பலமாகி இருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தமிழக எல்லைக்குள் இரட்டைமடை பிரிவு பகுதியில் தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய கேரள பதிவு எண் கொண்ட 3 டிப்பர் லாரிகளையும், ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்தனர். இதையடுத்து ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

அப்போது தான், பட்டா நிலத்தில் குழி தோண்டி கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகளை பல ஆண்டுகளாக இங்கே வந்து புதைக்கும் விவரம் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நில உரிமையாளர் சார்ஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த தனியார் நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல இடங்களில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கழிவுகள் புதைக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர் தமிழக எல்லையில் பட்டா நிலத்தை வாங்கி அங்கு குழிதோண்டி மூன்றாண்டுகளாக கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகளை புதைத்து வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.