×

2019ம் ஆண்டின் மேஷ ராசி புத்தாண்டு பலன்கள்!

மேஷ ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். மேஷம் : செவ்வாயினை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த 2019 ஆம் ஆண்டு மிக நல்ல பலன்களை உங்கள் ராசிக்கு கொடுக்கவுள்ளது. இந்த 2019 ஆம் ஆண்டு நீங்கள் எடுக்க கூடிய முற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பொற்காலம் உங்களுக்கு அமைய
 

மேஷ ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மேஷம் :

செவ்வாயினை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த 2019 ஆம் ஆண்டு மிக நல்ல பலன்களை உங்கள் ராசிக்கு கொடுக்கவுள்ளது. இந்த 2019 ஆம் ஆண்டு நீங்கள் எடுக்க கூடிய முற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.  

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பொற்காலம் உங்களுக்கு அமைய உள்ளது. 2018 ஆம் ஆண்டு நீங்கள் எடுத்த அனைத்து முற்சிகளுக்கும் 2019 ஆம் ஆண்டில் வெற்றிகள் கண்டிப்பாக கிடைக்க உள்ளது. 

2019 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு மிகப்பெரிய நல்ல பலன்கள் நடைபெற உள்ளது.

இந்த வருடத்தில் கிட்ட தட்ட ராஜ கிரகமான குரு பகவான் ஆறு மாதங்கள் உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாக பார்க்க இருப்பதால் உங்களது வீடுகளில் சுப நிகழ்சிகள் கண்டிப்பாக நடைபெறுவதற்கும் அல்லது சுப நிகழ்சிகளில் நீங்கள் பங்கு பெறுவதற்க்கும் அதிகமான வாய்ப்புகள் அமைந்துள்ளது.

இந்த புத்தாண்டில் பல்வேறு விதமான பாக்கியங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள் அதுமட்டுமில்லாது பூர்வீக சொத்துகளில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் உங்களுக்கு கிடைக்கும். 

இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான்  உங்களுக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதில் பல்வேறு இன்னல்களை கொடுத்துக்கொண்டு வந்தார் ஆனால் இந்த 2019 ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு  புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உங்களுக்கு உண்டாகும்.

குரு பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தினை பார்க்க உள்ளதால் பணம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் . உங்களுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் கடன் பிரச்சனைகளால் அவதி பட்டுவந்த உங்களுக்கு படி படியாக  கடன் பிரச்சனைகள் குறையும். 

உங்கள் ராசிக்கு வருகின்ற குரு பெயர்ச்சிக்கு பிறகு காதல் திருமணம் நடைபெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதுவரை காதல் வய படாதவர்கள் காதல் வய படுவதற்கு அதிகமான சூழ்நிலையினை  கிரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கும்.

திருமண வயதுடைய மேஷ ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக அமைந்துள்ளது. வீடு மனை வாங்கும் யோகம் உங்களுக்கு ஏற்படும் .

மேஷ லக்ன பலன்கள் : உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆண்டாக அமையும்.

அஸ்வினி நட்சத்திரம் : தொழில் வாய்ப்புகளில் மேன்மை கிடைக்கும்.

பரணி நட்சத்திரம் : பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரம் : புதிய தன வரவுகள் ஏற்பட கூடும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு 

பரிகாரம் :

இந்த வருடத்தில் ரத்த தானம் செய்வது மிக சிறந்த பரிகாரமாக அமையும்.