×

2019ம் ஆண்டின் கும்ப ராசி புத்தாண்டு பலன்கள்! 

கும்ப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். கும்பம் : தொழில் காரகனான சனியினை அதிபதியாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே. எந்த ஒரு செயலிலும் நேர்மையினை கடைபிடிக்க விரும்பும் உங்களுக்கு வருகின்ற புத்தாண்டு மிக சிறந்த நல்ல பலன்களை தரக்கூடிய ஆண்டாக கண்டிப்பாக அமையும். கொடுத்த வாக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பீர்கள் . உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடமான மிதுன
 

கும்ப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கும்பம் : 

தொழில் காரகனான சனியினை அதிபதியாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே. எந்த ஒரு செயலிலும் நேர்மையினை கடைபிடிக்க விரும்பும் உங்களுக்கு வருகின்ற புத்தாண்டு மிக சிறந்த நல்ல பலன்களை தரக்கூடிய ஆண்டாக கண்டிப்பாக அமையும்.

கொடுத்த வாக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பீர்கள் . உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடமான மிதுன ராசிக்கு ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் இந்த காலகட்டம் பொன்னான காலகட்டமாக அமையும்.

உங்களது ராசி நாதன் சனி பகவான் உங்களது ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். புதிய புதிய  வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க ஏற்ற சூழல்நிலை உருவாகும் கால கட்டம் இதுவாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தினை விட்டு பிரிந்து இருந்தவர்கள் விரைவில் ஒன்று சேர்வார்கள் .

மனதில் இருந்து வந்த பயம் மற்றும் குழப்பங்கள் நீங்கும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடி வந்து சேரும்.

புதிதாக வீடு, மனை மற்றும் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டாகும்.கடன் வாங்கி இடம் வாங்கும் காலகட்டம் இதுவாகும். மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

காதல் சம்ந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும்.உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலையில் பல்வேறு சாதனைகளை புரிவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் மற்றும் பதிவி உயர்வு ஏற்படும்.

கும்ப லக்ன பலன்கள் : உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்.

அவிட்டம் நட்சத்திரம் : வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சதயம் நட்சத்திரம் : உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரம் : பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2,4,6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை.

பரிகாரம் : கால பைரவர் வழிபாடு மிகசிறந்த பரிகாரமாக அமையும். தெரு நாய்களுக்கு உங்களால் முடிந்த அளவு உணவு அளித்து பராமறிப்பது மேன்மையான பலன்களை தரும்.