×

வேலைய ஆரம்பிச்சுட்டாங்கய்யா!.. விலை உயர்வால் 200கிலோ சின்ன வெங்காயம் திருட்டு!

பெரம்பலூர் அருகே விதைக்காக வைக்கப்பட்டிருந்த 200கிலோ சின்ன வெங்காயம் திருட்டு போனதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து, மழைக்காலம் தொடங்க உள்ளது. அதே போல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது வெங்காயம் அதிகம் விளைச்சல் செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததால் தமிழகத்துக்கு வெங்காய வரத்து குறைந்து, வெங்காய விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. அதுமட்டுமில்லாமல் உள்வரத்தும்
 

பெரம்பலூர் அருகே விதைக்காக வைக்கப்பட்டிருந்த 200கிலோ சின்ன வெங்காயம் திருட்டு போனதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து, மழைக்காலம் தொடங்க உள்ளது. அதே போல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது வெங்காயம் அதிகம் விளைச்சல் செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததால் தமிழகத்துக்கு வெங்காய வரத்து குறைந்து, வெங்காய விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. அதுமட்டுமில்லாமல் உள்வரத்தும் குறைந்த நிலையில், ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ.250க்கு மேல் விற்கப்பட்டு வந்தது.

இவ்வாறு வெங்காய விலை அதிரடியாக குறைந்ததால், விலையை அதிகம் வைத்து விற்பனை செய்வதற்காக பல இடங்களில் வெங்காயம் பதுக்கல்களும் திருட்டும் அதிகளவில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு இவை அனைத்தும் படிப்படியாக குறைந்ததைத்தொடர்ந்து, தற்போது மழைக்காலம் வருவதால் வெங்காய திருட்டுகள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், பெரம்பலூர் ஆலந்தூர்கேட் பகுதியில் தனது வயலில் இருந்த 200கிலோ சின்ன வெங்காயம் திருட்டு போனதாக விவசாயி ராஜேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விதைக்காக வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை யார் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அதிக அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.