×

தேனி மாவட்டத்தில் மருத்துவர்கள், காவலர் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 200 ஐ கடந்துள்ளது. அங்கு கொரோனா பரவலின் முக்கிய காரணம், சில முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவி வருகிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேனியின் நகர் பகுதிகளிலேயே கொரோனா பரவி வந்த நிலையில், தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவத் தொடங்கி விட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் எல்லா இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்
 

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 200 ஐ கடந்துள்ளது. அங்கு கொரோனா பரவலின் முக்கிய காரணம், சில முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவி வருகிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேனியின் நகர் பகுதிகளிலேயே கொரோனா பரவி வந்த நிலையில், தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவத் தொடங்கி விட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் எல்லா இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஒரு பயிற்சி மருத்துவருக்கும், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ள ஒரு பயிற்சி மருத்துவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல காவல் சார்பு ஆய்வாளர் உட்பட 20 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. அதில் பெரும்பாலானோர் சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்தவர்களும், நோய்த் தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.