×

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 அதிகாரிகள் கொரோனாவால் மரணம்!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மாவட்ட மேலாளர் சந்திர மாதவன் மற்றும் இளநிலை வருவாய் உதவியாளர் செல்வராஜ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 3,004 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 48 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். நாமக்கல் ஆட்சியர் அலுவலக மாவட்ட மேலாளர் சந்திர மாதவன் மற்றும் இளநிலை வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று செல்வராஜ் சிகிச்சை
 

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மாவட்ட மேலாளர் சந்திர மாதவன் மற்றும் இளநிலை வருவாய் உதவியாளர் செல்வராஜ் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 3,004 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 48 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். நாமக்கல் ஆட்சியர் அலுவலக மாவட்ட மேலாளர் சந்திர மாதவன் மற்றும் இளநிலை வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று செல்வராஜ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரமாதவனும் கொரோனாவால் உயிரழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் பலருக்கு கொரோனா பரவி இருக்கும் நிலையில், சந்திர மாதவன் மற்றும் செல்வராஜ் உயிரிழந்தது ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணியாற்றி வரும் எஸ். சோமசுந்தரம் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.