×

மதுரையில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு 1,672 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மற்றும் தேனியில்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது.

இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மற்றும் தேனியில் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மதுரையில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,672ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதுரை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.