×

இது ட்வீட்டில் அடங்காத் துயரம்..

பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(வயது70) நேற்று காலமானா. உடல்நலக்குறைவினால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலமானார். அவரின் மறைவு குறித்து தமிழர் தலைவர்களூம், அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது அறியப்படாத தமிழகம் என்று அவர் ஒரு நூல் எழுதி இருக்கிறார். அவரும் கூட அறியப்படாதவர்தான். வாழும்போதே அறிஞர்களும், பண்பாட்டு போராளிகளும் கொண்டாடப்படுவதில்லை என்பது வருத்தம் என்று தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. தமிழர் வாழ்வியல்-பண்பாடு-பழக்க வழக்கத்தின் தொன்மை பற்றி இறுதி
 

பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(வயது70) நேற்று காலமானா. உடல்நலக்குறைவினால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலமானார்.


அவரின் மறைவு குறித்து தமிழர் தலைவர்களூம், அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது அறியப்படாத தமிழகம் என்று அவர் ஒரு நூல் எழுதி இருக்கிறார். அவரும் கூட அறியப்படாதவர்தான். வாழும்போதே அறிஞர்களும், பண்பாட்டு போராளிகளும் கொண்டாடப்படுவதில்லை என்பது வருத்தம் என்று தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

தமிழர் வாழ்வியல்-பண்பாடு-பழக்க வழக்கத்தின் தொன்மை பற்றி இறுதி மூச்சுவரை ஆய்வு செய்தவர்-திராவிட இயக்கப்பற்றாளர்-தன் ஆய்வுகளை எழுத்துக்கூட்டி படிப்போர் கூட எளிதில் புரிந்துகொள்ளும்படி நூலாக்கி தந்தவர்.பெரியவர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ந்தேன். ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி.

தந்தை பெரியார் இறந்த அதே தினத்திலேயே பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவம் இறந்துள்ளது வேதனையளிக்கிறது. அடித்தள மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடையவர். திராவிட கருத்தியலை ஒட்டிய ஆராய்ச்சி முறையை முன்வைத்தவர். தொ.ப. உருவாக்கிய நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்கள் அவர் பணியை தொடர்வார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் கனிமொழி எம்.பி.

வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெரியாரிய மார்க்சிய பார்வையைக் கொண்ட அவருடைய ஆய்வுகள்,பண்பாட்டுத் தளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆய்வுத் தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம் என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.