×

சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 19 பேர் மரணம்.. உண்மையிலேயே குறைகிறதா பாதிப்பு?!

தமிழகத்திலேயே அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அரசு ஊரடங்கு பிறப்பதற்கு ஒரு நாள் முன்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த நிகழ்வு தான் சென்னையையே புரட்டி போடச் செய்தது. ஏனெனில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதனால் சென்னை மக்கள் பலருக்கும் கொரோனா பரவியது. சென்னைக்கு பிழைப்பதற்காக வந்தவர்களெல்லாம் உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அவர்கள் மூலமாக பிற மாவட்டங்களிலும் கொரோனா
 

தமிழகத்திலேயே அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அரசு ஊரடங்கு பிறப்பதற்கு ஒரு நாள் முன்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த நிகழ்வு தான் சென்னையையே புரட்டி போடச் செய்தது. ஏனெனில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதனால் சென்னை மக்கள் பலருக்கும் கொரோனா பரவியது. சென்னைக்கு பிழைப்பதற்காக வந்தவர்களெல்லாம் உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அவர்கள் மூலமாக பிற மாவட்டங்களிலும் கொரோனா தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.

இதனிடையே சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னர் இருந்த அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், சென்னையில் உண்மையிலேயே பாதிப்பு குறைந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.