×

ராமநாதபுரம்: இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் – வனத்துறை விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் சுமார் 5 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய டால்பினை மீட்டு ஆய்வுசெய்தனர்.அப்போது, சுமார் 11 வயது மதிக்கத்தக்க அந்த டால்பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு
 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் சுமார் 5 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய டால்பினை மீட்டு ஆய்வுசெய்தனர்.அப்போது, சுமார் 11 வயது மதிக்கத்தக்க அந்த டால்பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

தற்பொழுது பலத்த காற்று வீசி வருவதால் கடலில் உள்ள பாறையிலோ அல்லது படகிலோ மோதியதில் டால்பின் தலையில் காயம்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்த டால்பினுக்கு உடற்கூறு ஆய்வுசெய்து, அதேஇடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.