×

தீராத நோய்களையும், பாவத்தையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி!

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான். பிள்ளையாருக்கு அறுகம்புல்லும் எருக்கம்பூக்களுமே விசேஷம். காரணம் இது எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் பொருள்கள். ஆகச் சிறந்த வழிபாடு தோப்புக்கரணம். இப்படி எளிமையின் அடையாளமாக விளங்கும் விநாயகரை வழிபட உகந்த நாள்களில் ஒன்று சதுர்த்தி. சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும் என்பதால் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் பகல்பொழுது விரதமிருந்து மாலை
 

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான். பிள்ளையாருக்கு அறுகம்புல்லும் எருக்கம்பூக்களுமே விசேஷம். காரணம் இது எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் பொருள்கள்.

ஆகச் சிறந்த வழிபாடு தோப்புக்கரணம். இப்படி எளிமையின் அடையாளமாக விளங்கும் விநாயகரை வழிபட உகந்த நாள்களில் ஒன்று சதுர்த்தி.

சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும் என்பதால் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் பகல்பொழுது விரதமிருந்து மாலை கோயிலுக்கு சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வீட்டுக்கு வந்து விரதத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். விரதத்தை நிறைவு செய்த பின்னர், உப்பில்லாத உணவை உண்ண வேண்டும்.

அனைத்து விநாயகர் கோயிலிலும் இன்று மாலை நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டும் விரதம் இருக்கலாம். வேலைக்குச் செல்பவர்கள், விரதம் இருக்கமுடியாதவர்கள் மாலை கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வரலாம்.


இவ்விரதத்தை அனுஷ்டிப்போர்க்கு தீராத நோய்கள் தீரும். அனைத்துப் பாவங்களும் அகலும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டப்படுபவர்கள், இவ்விரதம் இருந்தால், சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கி வழிபட்டால், நினைத்த காரியம் சித்தி அடையும். திருமணத் தடை அகலும், கடன் தொல்லைகள் நீங்கும்.