16 பெண்களின் குளியல் வீடியோக்கள் – இளைஞரால் கதறும் கிராமம்
ஆற்றில் குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி விடுதிக்கு அழைத்து சென்று மேலும் பல வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம்பறித்து வந்தவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் முப்பத்தி கோட்டத்தை சேர்ந்தவர் எம்.ஏ. பட்டதாரி பாரதிராஜா(26). இவர் தனது கிராமத்தில் ஆற்றில் குளிக்கும் பெண்கள், மாணவிகளை மறைந்து நின்று வீடியோஎடுத்து வந்திருக்கிறார். அதை அப்பெண்களிடம் காட்டி தன் விருப்பத்திற்கு உடன்பட வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார். அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பணமும்பறித்து வந்திருக்கிறார்.
கல்லூரி மாணவி ஒருவரை இப்படி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததோடு அல்லாமல் பணம் பறித்து வந்த நிலையில், அவரால் பணம் கொடுக்க முடியாத சூழலில் கடந்த வாரம் அவரது அந்தரங்க படங்களை வாட்ஸ் அப்பில் பரவ விட்டதால், அந்த மாணவியின் சகோதரர்கள் திருக்குவளை போலீசில் புகார் கொடுக்க, போலீசார் பாரதிராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்கு அவர் மீது பதிவு செய்திருக்கின்றனர் என்று மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆற்றில் குளித்த அந்த மாணவியின் வீடியோவை காட்டி அவரை காரில் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து மயக்கி பாலியன் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துஅதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்தவர், மாணவியின் பயந்துகொண்டு கேட்ட பணத்தை கொடுத்து வந்திருக்கிறார். கொரோனாவால் தந்தை இறந்த சமயத்தில் பணம் கேட்டதால் கொடுக்க முடியாமல்போனதால் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
தங்களது கிராமத்தை சேர்ந்த 16 திருமணமான பெண்கள் , மாணவிகள், சிறுமிகளின் ஆபாச படத்தை தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருக்கிறார் இளையராஜா. போலீஸ் கைதுக்கு முன் அந்த செல்போனை உடைத்து வாய்க்கால் தண்ணீரில் தூக்கி போட்டிருக்கிறார் என்ற புலம்பி வருகின்றனர். வெளியூர் பெண்களின் ஆபாச படங்களும் அவரது செல்போனில் இருந்ததை பார்த்திருக்கிறோம்.
பாரதிராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் அவர் யாரையெல்லாம் மிரட்டி வந்தார், அவருடன் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று தெரியவரும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இனி எங்கள் கிராமத்தினர் நிம்மதியாக வாழ வழிபிறக்கும் என்கின்றனர்.