×

காலை 10 மணிக்குள் சென்னை வர புதிதாக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,562 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 1550 பேர் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளதாக ஜூன்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,562 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் போராடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 1550 பேர் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளதாக ஜூன் 5-ஆம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பணியமர்த்தப்பட்ட 980 மருத்துவர்கள் தற்போது உடனடியாக இன்று காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் 2 மாதம் தங்கி அரசு மறுத்துவமனைகளிலும், தனி சிறப்பு வார்டுகளிலும் பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.