×

144 தடை உத்தரவு.. பஸ், ஆட்டோக்கள் ஓடாது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.  இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர மற்ற கடைகள், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது என்று அறிவிக்கபட்டுள்ளது. பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.