×

புரட்டாசி விரதமும்- அறிவியல் காரணங்களும்!

புரட்டாசி மாதத்தில் பகல் நேரங்களில் கோடை காலத்தைப் போன்று அளவுக் கடந்த வெயிலும், இரவில் அதற்கு எதிராக அதிக மழையும் நிறைந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவு, வெயில் அதிகம். அப்போது, காரம், எண்ணை அதிகமாக உள்ள அசைவ உணவுகள் உண்டால், செரிமானம் குறையும். அதனால், வழக்கத்துக்கு மாறாக வயிற்று உபாதைகள் அதிகமாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த மாதம் சைவ உணவுக்கு மாறி விரதம் மேற்கொண்டுள்ளார்கள். இதில், அறிவியலும் ஆன்மிகமும் கலந்துள்ளது. சுக்கிரன்
 

புரட்டாசி மாதத்தில் பகல் நேரங்களில் கோடை காலத்தைப் போன்று அளவுக் கடந்த வெயிலும், இரவில் அதற்கு எதிராக அதிக மழையும் நிறைந்த மாதமாகும். புரட்டாசி மாதத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவு, வெயில் அதிகம். அப்போது, காரம், எண்ணை அதிகமாக உள்ள அசைவ உணவுகள் உண்டால், செரிமானம் குறையும். அதனால், வழக்கத்துக்கு மாறாக வயிற்று உபாதைகள் அதிகமாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த மாதம் சைவ உணவுக்கு மாறி விரதம் மேற்கொண்டுள்ளார்கள். இதில், அறிவியலும் ஆன்மிகமும் கலந்துள்ளது.

சுக்கிரன் பகவான் கண் பார்வைக்குரிய கோளாகும். இம்மாதத்தில் சுக்கிரன் பகவான் கன்னி ராசியில் நீச பலத்தோடு அமர்கிறார். சூரிய பகவானோடு இணைந்து அஸ்தமனம் பெறுகிறார். இந்த மாதத்தில் கண் நோய்கள் அதிகமாக வரும். ‘மெட்ராஸ் ஐ’ என்ற நோய் செப்டம்பர், அக்டோபரில் அதிகம் தாக்கும். சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனுடைய ஆதிக்கமும் வரும்போது மழை பெய்யும்.

பகலில் சூடு, இரவில் மழை என்ற பருவ மாற்றத்தைத் தாங்க உணவுக் கட்டுப்பாடு தேவை. ஆகவே இந்த மாதம் பாவத்தை (உயிர்க்கொலையை) ஓரளவு குறைக்கும் புண்ணிய மாதம் தான். உணவு சாத்வீகமானால் உணர்வு சாந்தமாகும். இந்த கொரொனா காலத்தில் உணவு கட்டுபாடு மிக மிக அவசியம். பொதுவாகவே விரதங்கள் இருப்பது நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். புனித மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியமும் கிடைக்கும்.

-வித்யா ராஜா