×

என்.எல்.சி கோர விபத்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து, சிவகுமார் என்ற பொறியாளரும் செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இன்று
 

கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியானது.

அதனைத்தொடர்ந்து, சிவகுமார் என்ற பொறியாளரும் செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இன்று காலை நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், பிற்பகல் மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்தார். இதனால் என்.எல்.சி விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளநிலை பொறியாளரான ஜோதி ராமலிங்கம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.