×

சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாளைக்கு 12 லட்சம் பேர் பயணம்!

சென்னை மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேர் பயணிப்பதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்காக குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு, அடுத்தடுத்த மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்கும் என
 

சென்னை மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேர் பயணிப்பதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்காக குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு, அடுத்தடுத்த மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 30ம் தேதி அக்டோபர் 1 முதல் பேருந்து சேவை இயங்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, கடந்த 1ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் பேருந்தில் பயணிக்க மக்கள் தயக்கம் காட்டினாலும், தற்போது பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேர் பயணிப்பதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும், செப். 1 முதல் தினமும் 2,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.