×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ள நிலையில், 757 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32,754 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. அதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாக பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ள நிலையில், 757 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32,754 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. அதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா அதிகமாக பரவியிருக்கும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னையில் இருந்து மக்கள் வெளியே செல்லாத வண்ணம் கடும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,861 ஆக உயர்ந்துள்ளது.