×

10 மாத ஊதியத்தை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத ஊதியத்தை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. அதில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கப் படவில்லை. தற்போது இந்த கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருப்பதாக கூறி
 

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 10 மாத ஊதியத்தை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. அதில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கப் படவில்லை. தற்போது இந்த கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருப்பதாக கூறி புதுச்சேரி கல்வித்துறையை கண்டித்து பல கட்ட போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காரைக்கால் மதகடி அருகே 100க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் அரசு உதவி பெறும் ஊழியர்களும் புதுவை அரசை கண்டித்தும் நிலுவையில் உள்ள 10 மாத சம்பளத்தை வழங்க வேண்டியும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து புதுவை அரசின் இதே நிலை தொடர்ந்தால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.