×

‘தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்’.. தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டு, மதுரை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு முன்னர், உயிர் பிழைத்துக் கொள்ளச் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு வெளியேறியவர்கள் மூலமாக அதிக அளவில் கொரோனா
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டு, மதுரை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக பொது முடக்கம் அமல்படுத்துவதற்கு முன்னர், உயிர் பிழைத்துக் கொள்ளச் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு வெளியேறியவர்கள் மூலமாக அதிக அளவில் கொரோனா பரவியது.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அதிக பட்சமாகச் சேலத்தில் 184 கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருப்பதாகவும் சென்னையில் 158 கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 84 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் மதுரையில் 75 பகுதிகளும், கடலூரில் 59 பகுதிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.