×

‘104‌‌GoTN ‘ புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25% பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் சூழலிலும், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றடுக்கு படுக்கைக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூடுதலாக 2000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் திண்டாடும் உறவினர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25% பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் சூழலிலும், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றடுக்கு படுக்கைக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூடுதலாக 2000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன.

இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் திண்டாடும் உறவினர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். ஏரளாமான மக்கள் இது போன்ற பதிவை வெளியிடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு 104‌‌GoTN ‌‌‌‌‌‌‌என்ற புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் சிறப்பு மையமாக இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என்றும் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.