×

கொரோனா பரிசோதனை தீவிரம்: தமிழகம் வந்தடைந்தது 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோருக்கு அதன் அறிகுறி இல்லை என வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதனால், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தென்கொரியாவிலிருந்து 15 லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைகின்றன. இதன்
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோருக்கு அதன் அறிகுறி இல்லை என வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அதனால், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள தென்கொரியாவிலிருந்து 15 லட்சம்  RT – PCR சோதனைக் கருவிகள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைகின்றன. இதன் மூலம் 15 லட்சம் பிசிஆர் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

கடந்த சில நாட்களை காட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அதிவேகமாக இருக்கிறது. அதனால் தென்கொரியாவிலிருந்து கூடுதலாக 1.5 லட்சம் RT – PCR கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்காக 6 லட்சத்து 77 ஆயிரம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.