×

இளவட்டக்கல் போட்டியில் அலப்பறை செய்த ‘குடி’மகன்!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த வடலிவிலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போத் இளவட்டக்கல் போட்டி நடைபெறூவது வழக்கம். அதன்படியே இந்த வருட போட்டிக்காக 45 கிலோ, 90 கிலோ, 129 கிலோ ஆகிய எடைகளில் இளவட்டக்கல் கொண்டு வரப்பட்டன. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும், சிறுவர்களும் கூட இந்த இளவட்டக்கல்லினை தூக்கி சாகசம் படைத்தார்கள். இந்த இளைவட்டக்கல்லை தூக்கி 11 முறை கழுத்தை சுற்றி சாகசம் செய்ய வேண்டும். இதில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில், தங்கராஜ் என்பவர் 129
 

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த வடலிவிலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போத் இளவட்டக்கல் போட்டி நடைபெறூவது வழக்கம். அதன்படியே இந்த வருட போட்டிக்காக 45 கிலோ, 90 கிலோ, 129 கிலோ ஆகிய எடைகளில் இளவட்டக்கல் கொண்டு வரப்பட்டன.

ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும், சிறுவர்களும் கூட இந்த இளவட்டக்கல்லினை தூக்கி சாகசம் படைத்தார்கள்.

இந்த இளைவட்டக்கல்லை தூக்கி 11 முறை கழுத்தை சுற்றி சாகசம் செய்ய வேண்டும். இதில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில், தங்கராஜ் என்பவர் 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தூக்கி 11 முறி கழுத்தை சுற்றி முதல் பரிசை தட்டிச்சென்றார்.

அதே போல் 90 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை 11முறை கழுத்தை சுற்றி தூக்கிய முத்துப்பாண்டிக்கு 2ம் பரிசு கிடைத்தது.

பத்மா என்ற பெண், 45 கிலோ எடையுள்ள உரலை தூக்கி முதல் பரிசை பெற்றார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எல்லோருக்கும் முன்பாக ஒரு குடிமகன் தான் இந்த போட்டியில் முதலில் பங்கேற்றார்.

இளவட்டக்கல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக செம போதையில் அங்கே ஒருவர் அலப்பறைகொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் இளவட்டக்கல்லை தூக்கினார். பாதி முயன்றவர் அதற்கு மேல் முடியாமல் கிழே போட்டுவிட்டு தானும் கீழே விழுந்து மட்டை ஆனார்.

தள்ளாடி தள்ளாடி அவர் இளவட்டக்கல்லினை தூக்கியபோது, கூட்டத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.