×

’விதி முடியப்போகுது…’ குலதெய்வத்தை மனமுருக வேண்டிக் கொள்ளும் விஜயகாந்த் குடும்பம்..!

இவங்களால தேமுதிக விதி தான் முடியப்போகுது. இதுல கேப்டன் கோயில் குளம்னு போய் என்ன புண்ணியம் எனபுலம்பித் தீர்க்கிறார்கள். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குலதெய்வமான மதுரை, திருமங்கலம் அருகில் காங்கேய நத்தத்தில் இருக்கும் வீரசின்னம்மாள் கோவிலுக்கு வருஷத்துக்கு ஒருமுறை சென்று வருவது வழக்கம். உடல்நிலை சரியில்லாததால் ரொம்ப நாளாக விஜயகாந்த் அங்கே போகவில்லை. இப்போது விஜயகாந்தோட உடல் நலம் தேறி வருகிறது. அத்துடன் அவரது மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதனால்
 

இவங்களால தேமுதிக விதி தான் முடியப்போகுது. இதுல கேப்டன் கோயில் குளம்னு போய் என்ன புண்ணியம் எனபுலம்பித் தீர்க்கிறார்கள்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குலதெய்வமான மதுரை, திருமங்கலம் அருகில் காங்கேய நத்தத்தில் இருக்கும் வீரசின்னம்மாள் கோவிலுக்கு வருஷத்துக்கு ஒருமுறை சென்று வருவது வழக்கம். 

உடல்நிலை சரியில்லாததால் ரொம்ப நாளாக விஜயகாந்த் அங்கே போகவில்லை. இப்போது விஜயகாந்தோட உடல் நலம் தேறி வருகிறது. அத்துடன்  அவரது மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதனால்  குடும்பத்தோட, குலதெய்வம் கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கே 30 நிமிஷம் உட்கார்ந்து மனம் உருக குலதெய்வத்தை வேண்டி விட்டு வந்திருக்கிறார்.

இருந்தும் என்ன புண்ணியம்… அவரது மனைவி எல்லாவற்றிற்கும் சேர்த்து வேட்டு வைத்து வருகிறார். 
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கட்டியிருந்த பேனர் ஒரு இளம்பெண் உயிரை வாங்கி விட்டது. இதற்கு பல கட்சி தலைவர்களும், கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிற, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, ‘அந்தப் பெண்ணுக்கு விதி முடிஞ்சு போயிடுச்சு… அதுக்கு ஆளுங்கட்சிக்காரா என்ன பண்ணுவாங்க? அவங்களை குறை சொல்லக்கூடாது’’ எனப்பேசினார். 

அவரது மகன் விஜய பிரபாகரனும், ‘அரசியல் கட்சி இல்லாமல் தனியார் பேனர் விழுந்து அந்தப் பெண் இறந்திருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சை ஆகியிருக்காது’ எனப்பேசினார். இதை, தே.மு.தி.க.வினரே ரசிக்கவில்லை. ஏற்கனவே, நம்ம கட்சி நாளுக்கு நாள், வீக்காகி வருகிறது. இப்படி எல்லாம், ஆளுங்கட்சிக்கு முட்டு தாங்கி கொண்டு இருந்தால் விழுகிற கொஞ்ச நஞ்ச ஓட்டுகளும் விழாம போய்விடும். இவங்களால தேமுதிக விதி தான் முடியப்போகுது. இதுல கேப்டன் கோயில் குளம்னு போய் என்ன புண்ணியம் எனபுலம்பித் தீர்க்கிறார்கள்.