×

’அந்த’ விஷயத்தில் அப்பாவை மிஞ்சிட்டாரே… உதயநிதி ஸ்டாலினால் கதிகலங்கும் திமுக நிர்வாகிகள்..!

ஆக மொத்தத்தில் அப்பாவை மிஞ்சிய பிள்ளை என திமுக நிர்வாகிகள் கதிகலங்கி வருகிறார்கள். தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் 2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ‘நமக்கு நாமே’ நடைபயணம் சென்றார். ஓர் ஊரில் விவசாயிகளை சந்திக்க அவர் சென்றபோது வயலில் சிறியதாக சிமென்ட் நடைபாதை போடப்பட்டு இருந்தது. சமீபத்தில் அவரது மகன் உதயநிதி ஏரி துார் வாரும் பணியை பார்வையிட திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அப்போது அவர் நடப்பதற்காக ஏரியை சுற்றி கட்சிக்காரர்கள் சிவப்பு கம்பளம் போட்டிருந்தனர். இதைத்
 

ஆக மொத்தத்தில் அப்பாவை மிஞ்சிய பிள்ளை என திமுக நிர்வாகிகள் கதிகலங்கி வருகிறார்கள்.

 தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் 2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ‘நமக்கு நாமே’ நடைபயணம் சென்றார். ஓர் ஊரில் விவசாயிகளை சந்திக்க அவர் சென்றபோது வயலில் சிறியதாக சிமென்ட் நடைபாதை போடப்பட்டு இருந்தது. சமீபத்தில் அவரது மகன் உதயநிதி ஏரி துார் வாரும் பணியை பார்வையிட திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றார். அப்போது அவர் நடப்பதற்காக ஏரியை சுற்றி கட்சிக்காரர்கள் சிவப்பு கம்பளம் போட்டிருந்தனர்.  இதைத் தான், ‘அப்பாவை போல பிள்ளையும் இருக்கிறார்’ என ‘மீம்ஸ்’ போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, மாவட்டம், மாவட்டமாக சென்று வருகிறார். அவரை வரவேற்கிற வகையில் போஸ்டர் ஒட்டுவது, கொடி, தோரணங்கள் கட்டுவது, கூட்டத்துக்கு ஆள் திரட்டுவது, மாவட்டச் செயலர்கள் என லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள்.

அதேபோல் இப்போது இளைஞரணி செயலாளரான ஸ்டாலின் மகன் உதயநிதியும் மாவட்ட வாரியாக பயணம் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். ஸ்டாலினுக்கு இணையாக உதயநிதியையும் வரவேற்க மாவட்டச் செயலர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

சில மாவட்டச் செயலர்கள் செலவு செய்ய முடியாமல்  தங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற நகர, ஒன்றிய செயலர்களை செலவு செய்யச் சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களோ பணமில்லாமல் திணறி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் அப்பாவை மிஞ்சிய பிள்ளை என திமுக நிர்வாகிகள் கதிகலங்கி வருகிறார்கள்.