×

‘கழகத்தின் எதிர்காலமே’ … உதயநிதியை புகழ்ந்த திமுக மூத்த நிர்வாகி!

இயக்கத்தின் எதிர்காலமே என்று உதயநிதி ஸ்டாலினை அக்கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு புகழ்ந்து பேசியுள்ளார். இயக்கத்தின் எதிர்காலமே என்று உதயநிதி ஸ்டாலினை அக்கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு புகழ்ந்து பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவுக்காகப் பரப்புரை மேற்கொள்ளக் களமிறங்கிய ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அனல் பறக்கும் தனது பிரசாரத்தால் உதயநிதி மக்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி
 

இயக்கத்தின் எதிர்காலமே  என்று உதயநிதி ஸ்டாலினை அக்கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு புகழ்ந்து பேசியுள்ளார். 

இயக்கத்தின் எதிர்காலமே  என்று உதயநிதி ஸ்டாலினை அக்கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு புகழ்ந்து பேசியுள்ளார். 

மக்களவை தேர்தலில் திமுக 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவுக்காகப் பரப்புரை மேற்கொள்ளக் களமிறங்கிய ஒருவர் உதயநிதி ஸ்டாலின். அனல் பறக்கும் தனது  பிரசாரத்தால்  உதயநிதி மக்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று  மாவட்டச் செயலாளர்கள் பலர் வலியுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மக்களவை தேர்தலில்  திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை, போரூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது கூட்டத்தில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசும் போது, இயக்கத்தின் இளந்தென்றல் கழகத்தின் வருங்காலம்  மற்றும் இயக்கத்தின் எதிர்காலம் என்றும் புகழ்ந்து பேசினார்.

ஏற்கனவே உதயநிதி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில்  களமிறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் திமுகவின் மூத்த நிர்வாகியே அவரை இயக்கத்தின் எதிர்காலம்  என்று கூறுவதன் மூலம் உதயநிதி மிக விரைவில் தீவிர அரசியலில் களம்  காண்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.