×

‘கருணாநிதி’யின் பேரன் பணமோசடி வழக்கில் கைது: ‘முரசொலி’யில் அறிவிப்பு வெளியிட்டு ஜகா வாங்கிய குடும்பம்!

ஜோதிமணி மீது போலி மருந்து தயாரித்ததற்கான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கோடு சேர்ந்து பணமோசடி வழக்கும் விசாரிக்கப்படும் திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகனும், கருணாநிதியின் பேரனுமாகிய ஜோதிமணி பணமோசடியின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகீர் அகமத் தமான் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சவுகார் பேட்டை காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷ் என்பவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, எனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டு கோடிக்கணக்கில் உள்ளது. அதனால் அதை
 

ஜோதிமணி மீது போலி மருந்து தயாரித்ததற்கான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கோடு சேர்ந்து பணமோசடி வழக்கும் விசாரிக்கப்படும்

திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் மருமகனும்,  கருணாநிதியின் பேரனுமாகிய ஜோதிமணி  பணமோசடியின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜாகீர் அகமத் தமான் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சவுகார் பேட்டை காஸ்மெட்டிக் வியாபாரி தினேஷ் என்பவரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, எனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டு கோடிக்கணக்கில் உள்ளது. அதனால் அதை 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தால் 20%கமிஷனும், 1 கோடி ரூபாயும் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

இதை நம்பி தினேஷும் 80 லட்சம் ரூபாய் பணத்துடன்,  சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள பங்களாவுக்கு சென்றுள்ளார். அங்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்துள்ளனர். அப்போது தினேஷிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட முனியாண்டி, விக்கேஷ், டேவிட் மூவரும் பணத்தை எண்ணுவதாக கூறி பின்புறமாக எடுத்து கொண்டு ஓடியுள்ளனர். பின்வாசல் வழியே சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் காணவில்லை என்பதால், தினேஷ், நீலாங்கரை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கிருந்த  ஜோதிமணி மற்றும் ஜாகீரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுபோன்ற பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே ஜோதிமணி மீது போலி மருந்து தயாரித்ததற்கான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கோடு சேர்ந்து பணமோசடி வழக்கும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விவகாரத்தை தொடர்ந்து தங்களுக்கும் ஜோதி மணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருணாநிதி மகள் செல்வி மற்றும் அவரது கணவர் செல்வம் இருவரும் முரசொலி நாளிதழில் விளம்பரம் செய்துள்ளனர். 

 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை, 5 முறை தமிழக முதல்வர் என  வாழ்ந்து மறைந்த கருணாநிதியின் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்  புதிதல்ல. இதுபோன்ற பல  வழக்குகளை திமுகவும் கருணாநிதியின் குடும்பத்தினரும் சந்தித்துள்ளனர். இதில் சிறையில் காலம் கழித்த கதையும் உள்ளது. ஆனால்  ஜோதி மணியின் இந்த நூதன பணமோசடி புகார் ஆளுங்கட்சிக்குத் தீனிபோட்டுள்ள மாதிரி சிக்கியுள்ளதால் அண்ணா அறிவாலயத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.