×

ஹெல்மெட் போடாமல் சென்ற அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை: இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது கட்டாயத்தில் இருக்கிறது. இதுகுறித்து அரசு
 

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை: இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது கட்டாயத்தில் இருக்கிறது. இதுகுறித்து அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை விஜயபாஸ்கர் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அவர் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.