×

ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில்தான் ஈபிஎஸ் – ஓபிஎஸ் சென்றனர்: பிரேமலதா அதிரடி

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் சென்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். திண்டுக்கல்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் சென்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
 

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் சென்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

திண்டுக்கல்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் சென்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலில் பாதித்த மக்களை நேரடியாக சந்திக்க முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஹெலிகாப்டரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்றது மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்காக அல்ல. ஜெயலலிதாவைப் போல் தாங்களும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசைபட்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

புயல் தாக்குதல் முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அரசு கேட்ட இடைக்கால நிவாரணத்தை கூட மத்திய அரசால் வழங்க முடியவில்லை. நிவாரணத்தை கேட்க கூட பயந்து எடப்பாடி பழனிசாமி அடிமை அரசு நடத்தி வருகிறார்.

இதே தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் சென்றது வேதனையளிக்கும் வி‌ஷயம். மக்களை சந்திக்காத துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை மக்கள் வரும் தேர்தலில் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள் என்றார்கள்.