×

ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தவில்லை: மாஃபா பாண்டியராஜன் பிரத்யேக பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக வெளியான ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் தவறு செய்தது உண்மை எனில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, திமுக
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டை நான் சுமத்தவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக வெளியான ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் தவறு செய்தது உண்மை எனில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாஃபா பாண்டியராஜனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிமுக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றுதான் கூறினேன். ஸ்டாலின் மீதோ துரைமுருகன் மீதோ எந்தவித பாலியல் குற்றச்சாட்டையும் நான் முன்வைக்கவில்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என விளக்கமளித்தார்.