×

ஸ்டாலினுக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் எம்.பி தி.மு.க-வில் இருந்து அதிரடி நீக்கம்!

மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். மு.க.அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்காமலிருந்தனர். தி.மு.க விவசாய அணித் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டார். மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். மு.க.அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால் அவரை கட்சியிலிருந்து
 

மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். மு.க.அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்காமலிருந்தனர்.

தி.மு.க விவசாய அணித் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டார்.
மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். மு.க.அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்காமலிருந்தனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதற்கு கே.பி.ராமலிங்கம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.