×

ஸ்டாலினின் செயல்பாடுகளால் மனம் நொந்துப் போன கனிமொழி? ஜெ. மூலம் வெளி உலகிற்கு அம்பலம்!

கனிமொழிக்கு திமுகவில் முக்கியத் துவம் குறைக்கப்பட்டு வருவதை அவர் உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்படாகவே ஜெயலலிதா நினைவுநாள் ட்வீட்டில், ‘ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில்..!’ என ஸ்டாலினை மறைமுகமாக அவர் சாடியிருப்பதாகவும் அறிவாலய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு திமுகவில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருவதை அவர் உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்படாகவே ஜெயலலிதா நினைவுநாள் ட்வீட்டில், ‘ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில்..!’ என ஸ்டாலினை மறைமுகமாக அவர் சாடியிருப்பதாகவும் அறிவாலய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்
 

கனிமொழிக்கு திமுகவில் முக்கியத் துவம் குறைக்கப்பட்டு வருவதை அவர் உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்படாகவே ஜெயலலிதா நினைவுநாள் ட்வீட்டில், ‘ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில்..!’ என ஸ்டாலினை மறைமுகமாக அவர் சாடியிருப்பதாகவும் அறிவாலய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

கனிமொழிக்கு திமுகவில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருவதை அவர் உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்படாகவே ஜெயலலிதா நினைவுநாள் ட்வீட்டில், ‘ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில்..!’ என ஸ்டாலினை மறைமுகமாக அவர் சாடியிருப்பதாகவும் அறிவாலய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது” என ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்றது சாதாரணம் அல்ல என கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

இது, ஜெயலலிதாவிற்கு கனிமொழியின் அனுதாபங்கள் என எடுத்துக் கொண்டாலும், கனிமொழி உபயோகித்துள்ள வார்த்தைகளில் ஆயிரம் அரசியல் அர்த்தங்கள் அடங்கியிருப்பதாகவே கனிமொழி ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

ஏனெனில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த போதே, அவர் பிறந்த நாளான கடந்த ஜூன் 3 அன்று, `நீயற்ற நாட்கள்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார் கனிமொழி. அதில், `ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை, கைகள் சோர்ந்து நம்பிக்கை இற்று விழும்முன் வா. உன் கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்துக் கேடயம் ஏந்தி வா. வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் ரட்சகனுக்காக’ எனப் பதிவு செய்திருந்தார். ஸ்டாலினுக்கு எதிரான கவிதையாகவே இதைக் கவனித்தனர் உடன்பிறப்புகள். கழகம் துவண்டு போய்க் கிடப்பதைத்தான் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் கனிமொழி. 

அதன்பின், கருணாநிதி மறைந்த போது, அவரின் குடும்பம் மீண்டும் ஒன்றாகிவிட்டதாகவே எதிர் முகாமில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் கணித்திருந்தனர். ஆனால், கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள், கலகக் குரலை கிளப்பினார் மூத்தவரான அழகிரி. 

அப்போது எழுந்த சிக்கல்களைக் கடந்து திமுக தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்திற்கே சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசிவாங்கினார். இருந்த போதும், ஸ்டாலின் இதை முழு மனதுடன் செய்யவில்லை, அந்த நேரத்தில் கட்சிக்குள் இருந்த அழகிரி நெருப்பை அணைப்பதற்காகவே இதைச் செய்தார் என்றும் சிலர் கூறுவதை பார்க்க முடிந்தது.

ஏனெனில், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட திமுகவின் பதவிகளுக்கு அடுத்தடுத்து ஆட்களை நியமித்த ஸ்டாலின், கனிமொழிக்கு எந்த பதவியும் கொடுக்காமல் இழுத்தடிப்பதை அவரது ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. ஏற்கனவே, கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும், கனிமொழிக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கும் கனிமொழி அழைக்கப்படவில்லை. இதுவே கலைஞர் இருந்திருந்தால், “கூட்டத்துக்கு வாம்மா..” என முறையாக தொலைபேசியில் அழைப்பு விடுத்திருப்பார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் கனிமொழி ஆதரவாளர்கள்.

இது ஒரு புறம் இருக்க, நூலகக் கட்டடத்தைத் திறப்பதற்காக கடந்த வார இறுதியில் நெல்லை சென்றிருந்த கனிமொழி, சங்கர் சிமென்ட் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அங்கிருந்த நிர்வாகிகளிடம், `தலைவர்(கருணாநிதி) வந்தால் பயன்படுத்தும் அறையைத் திறந்து காட்டுங்கள்’ எனக் கேட்டார். உடனே ஆச்சர்யமான நிர்வாகிகள், கருணாநிதி பயன்படுத்தும் அறையைத் திறந்துவிட்டுள்ளனர். அந்த அறைக்குள் எந்த வார்த்தைகளையும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாக நின்றுள்ளார். தன்னுடைய மனதில் நிறைந்து கிடந்த குறைகளைக் கருணாநிதியிடம் அவர் பேசியது போல் இருந்ததாக உடனிருந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதன் நீட்சியாகவே, ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், கனிமொழி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக இருந்து வெற்றி பெறுவது எளிதல்ல. அந்த விதத்தில் ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும்” என தன் மனக் குமுறலை கனிமொழி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.