×

வேலுமணி – தங்கமணியை ஓரம் கட்டும் பரம ரகசியம்… எடப்பாடியின் ’மாஸ்டர்’ ப்ளான்..!

சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக்குடன் வியாபாரத் தொடர்பிலும் இருக்கிறார் எடப்படி மகன் மிதுன். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் யுத்தம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், ராஜன்செல்லப்பா மகன் ராஜ் சத்யன் என அதிமுகவில் வாரிசு அரசியல் ஏற்கனவே கொடிகட்டிப் பறக்கிறது. இதன் எதிரொலியாக முதல்வர் எடப்பாடி, தனது வாரிசான மிதுனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு ஆர்டர் போட்டிருக்கிறாராம். ஓ.பி.எஸ். நடத்திவரும் வாரிசு
 

சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக்குடன் வியாபாரத் தொடர்பிலும் இருக்கிறார் எடப்படி மகன் மிதுன்.

அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் யுத்தம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், ராஜன்செல்லப்பா மகன் ராஜ் சத்யன் என அதிமுகவில்  வாரிசு அரசியல் ஏற்கனவே கொடிகட்டிப் பறக்கிறது.

இதன் எதிரொலியாக முதல்வர் எடப்பாடி,  தனது  வாரிசான மிதுனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு  ஆர்டர் போட்டிருக்கிறாராம். ஓ.பி.எஸ். நடத்திவரும் வாரிசு அரசியலுக்குப் பதில் கொடுக்கத்தான் எடப்பாடியும் இப்படி வரிந்து கட்டியிருக்காராம். தன் மகன் ரவீந்திரநாத்தைக் கொஞ்சம் கொஞ்சமாஅரசியலில் இறக்கிவிட்ட ஓ.பி.எஸ்., இப்ப எம்.பி.யாகவும் ஆக்கி டெல்லிக்கு அனுப்பியிருக்கார்.

அத்துடன்  தன் மகனை மத்திய அமைச்சராக்கும் முயற்சியிலும் மும்முரம் காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த எடப்பாடி குடும்பத்தினர், நீங்களும் உங்க மகனை அரசியலில்  களமிறக்குங்க என எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.  குறிப்பாக எடப்பாடியின் மனைவி ராதா, ‘’நம்ம பையன் எந்த வகையில் ரவீந்திரநாத்துக்கு குறைச்சல்? நம்ம மிதுனை வெளிச்சத்துக்குக் கொண்டுவரணும்னு உங்களுக்குத் தோணலையா?’’ எனக் கேட்டிருக்கார். மிதுனும் அப்பாவுக்கு ரொம்ப உதவியா இருக்கிறாராம்.

அதன் எதிரொலியாத்தான் இப்போது எடப்பாடி தன் மகன்மிதுனை  அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தன்னோடு அழைச்சிக்கிட்டுப்போக ஆரம்பித்திருக்கிறார். அண்மைக் காலமாக எடப்பாடி மகன் மிதுன்தான், அவருக்கான டீலிங்குகள் எல்லாவற்றையும் கவனித்து வருகிறார். இதையெல்லாம் பார்த்து எரிச்சலாகித்தான், எடப்பாடியின் பக்கபலமான அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும் அவரிடமிருந்து விலகி நிக்கிறார்கள்.  எடப்பாடியும் அவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள். 

அந்த இரண்டு அமைச்சர்களும் எடப்பாடியை ஓவர்டேக் செய்து, டெல்லியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்களாம்.  மகன் இருக்கும் தைரியத்தில் தான் முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் வெளிநாடு பறந்த்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக்குடன் வியாபாரத் தொடர்பிலும் இருக்கிறார் எடப்படி மகன் மிதுன்.